பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்ற போதும் கொஞ்சம் கூட பதற்றமில்லாமல், கார்த்திக்கிடம் சிங்கிளை மறுத்துவிட்டு “பாத்துக்கலாம்” என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் பாண்டியா.
ஒரு கட்டத்தில் பாண்டியாவின் கரியர் அவ்வளவுதான். இனி வெங்கடேஷ் ஐயர், தாக்கூர் போன்றோர்தான் அவரின் இடத்தை நிரப்ப உள்ளனர் என்று பேசப்பட்டது. ஆனால், கே.ஜி.எஃப் ஸ்டைலில் ‘One and Only Piece’ என்பது போல திரும்பிவந்து முன்பு இருந்ததைவிட தன் முக்கியத்துவத்தை நன்கு உணர்த்திவிட்டார்.
கேப்டன்சியின் மூலம் களத்தில் அமைதியாகவும், பதற்றமில்லாமலும் இருக்கும் குணத்தை பாண்டியா வளர்த்துக்கொண்டுள்ளார். அது மட்டுமன்றி நேற்றைய போட்டியில் பௌலர்களிடம் கலந்து பேசுவது என தன் தலைமை பண்பையும் களத்தில் அவ்வப்போது காட்டினார்.