சேலம் எட்டு வழிச்சாலை திமுக தேர்தல் வாக்குறுதியில் இருந்ததா? – அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த கருத்தும் உண்மையும்

Share

  • க. சுபகுணம்
  • பிபிசி தமிழ்

திமுக தேர்தல் வாக்குறுதியில் 8 வழிச்சாலை

பட மூலாதாரம், Getty Images

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கையை மேற்கொள்வது குறித்த அரசின் ஆய்வு நடைபெற்றது. அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு “8 வழிச்சாலை போடக்கூடாது என்று திமுக சொல்லவே இல்லை” என்று கூறினார். இது உண்மையா?

பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு குறித்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் எ.வ.வேலு, “திமுக சாலை போடுவதற்கு எதிரியல்ல. விவசாயிகளை அழைத்துப் பேசி அவர்களுக்கு என்ன தேவை எனப் புரிந்துகொண்டு பிரச்னையைத் தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள், அல்லது மாற்று வழி காணுங்கள் என்பதைத்தான் திமுகவின் கொள்கையாக வைத்திருந்தோமே ஒழிய எட்டு வழிச்சாலையைப் போடக்கூடாது என்று திமுக எந்தக் காலத்திலும் சொல்லவே இல்லை” என்று பேசியுள்ளார்.

எட்டு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டதை ஏற்கெனவே சட்டமன்றத்தில் அமைச்சர் பதிவு செய்துள்ளார். இருப்பினும், முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக இதை முழுமையாக எதிர்த்ததா இல்லையா என்ற விவாதத்தை அவருடைய இந்தப் பேச்சு தொடங்கி வைத்துள்ளது.

எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கண்டித்த ஸ்டாலின் அறிக்கை

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com