“தொண்டர்கள் நம் பக்கம், குண்டர்கள் அவர்கள் பக்கம்!” – ஆதரவாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் | ops met his supporters in his theni farm house

Share

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவு ஓ.பி.எஸ்-க்கு சாதகமாக அமைந்தது. இதையடுத்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் ​தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணைவீட்டில் வைத்து ஆதரவாளர்கள் சந்தித்து வருகிறார். அதன்படி இன்று மதியம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க-வினர் ஆயிரம் பேர் ஓ.பி.எஸ் பண்ணைவீட்டிற்கு வந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

ஓ.பி.எஸ் - பண்ணை வீடு

ஓ.பி.எஸ் – பண்ணை வீடு
ஜெ.நந்தகுமார்

அப்போது அவர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், “ஜூன் 23-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு முறையாக நடக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தற்காலிக அவைத்தலைவரைத் தேர்வு செய்வதற்கான முன்மொழிவை நான் செய்யவேண்டும். அதை இணை ஒருங்கிணைப்பாளர் வழிமொழிந்திருக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்ட அதிமுக-வினருடன் ஓபிஎஸ்

திண்டுக்கல் மாவட்ட அதிமுக-வினருடன் ஓபிஎஸ்

ஆனால், அந்த வரைமுறைகூட நடக்கவிடாமல் ரெளடிகளும், கேடிகளும் கூச்சலிட்டு கூட்டத்தையே அவமதித்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் தீர்மானங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டு வாசிக்கப்பட இருந்தநிலையில் சி.வி.சண்முகம் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தது வரம்புமீறிய செயல்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com