இந்தியக் கால்பந்து கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ஃபிபா

Share

FIFAவின் அறிவுரையையும் ஏற்காமல் மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற தலையீடு இருப்பதன் காரணமாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு (AIFF) தடை விதிப்பதாக ஃபிபா ஆகஸ்ட் 15ம் தேதியன்று, அறிவித்தது. அந்த தடையை ஃபிபா இப்பொழுது விலக்கியுள்ளது.

இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு நிர்வாக முடிவுகளில் 3ம் தரப்பினர் தலையீடு இருப்பதாக உலகக் கால்பந்துக் கூட்டமைப்பு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டது, இதன் மூலம் யு-17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடைபெறும்.

உச்ச நீதிமன்றம் தான் நியமித்த 3 பேர் கொண்ட நிர்வாகக் கமிட்டியைக் கலைத்ததையடுத்து உலகக் கால்பந்து கூட்டமைப்பு தடையை நீக்கியது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பிடமே நிர்வாகத்தை ஒப்படைத்தது. இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 2-ம் தேதி கால்பந்து கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அதிகாரி உமேஷ் அறிவித்தார்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு அமைத்த நிர்வாக குழு கலைக்கப்பட்டதையடுத்து, இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை பிபா நீக்கியது. 3-ம் நபர் தலையீடு நீங்கியதையடுத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தடை நீக்கப்படுவதாக ஃபிபா அறிவித்துள்ளது. இதன் மூலம், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியா நடத்தப்பட உள்ளது.

Read More : கேப்டன் டீன் எல்கரின் தவறான முடிவு- இங்கிலாந்தின் Bazball அட்டாக்கில் சிக்கும் தென் ஆப்பிரிக்கா!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய கால்பந்து கூட்டமைப்பு எடுத்து வருகிறது. 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 11 முதல் 30-ம் தேதி வரை மும்பை, கோவா, புவனேஷ்வர் ஆகிய 3 நகரங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Lilly Mary Kamala

First published:

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com