தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலக்கட்டத்தில் அனைத்து வடிவங்களிலும் கோலிதான் அணியின் துணைக் கேப்டன். பிறகு 2014-ல் ஆஸ்திரேலியா தொடரில் தோனி பாதியிலேயே டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அப்போது விராட் கோலியிடம் கேப்டன்சி வந்தது.
இந்நிலையில் தன் ட்வீட்டில் விராட் கோலி, “தோனியின் நம்பகமான துணைக் கேப்டனாக இருந்தது என் மகிழ்ச்சியான காலக்கட்டம்” என்று குறிப்பிட்டு பின்னணியில் தோனியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தோனியின் ஜெர்சி எண் 7 மற்றும் தன் ஜெர்சி எண் 18 ஆகவே 7+18 என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது நேற்று 25ம் தேதி என்பதால் 7+18 என்று பகிர்ந்துள்ளார் விராட் கோலி.
33 வயதாகும் கோலி 2019க்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் பார்ம் சரிவு கண்டு இப்போது பெரிய விமர்சனங்களை சந்தித்து வருகிறார், திடீரென தன் கிரிக்கெட் வாழ்க்கையின் மலரும் நினைவுகளை பகிர்ந்தவுடன் அனைவருக்குமே அவர் மனதில் ஓய்வு பெறும் எண்ணம் வந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுவது இயல்புதானே.
Being this man’s trusted deputy was the most enjoyable and exciting period in my career. Our partnerships would always be special to me forever. 7+18 ❤️ pic.twitter.com/PafGRkMH0Y
— Virat Kohli (@imVkohli) August 25, 2022
கோலி 43 ஒருநாள் சதங்களையும் 27 டெஸ்ட் சதங்களையும் எடுத்து 70 சதங்களில் உள்ளார், குறுகிய காலத்தில் இதைச் சாதித்த கோலி 71வது சதத்துக்காக போராடி வருகிறார். ஆசியக் கோப்பையில் அவர் தன்னை நிரூபித்தே ஆகவேண்டும் இல்லையெனில் டி20 உலகக்கோப்பையில் அதிர்ச்சிகர நீக்கத்தையே அவர் சந்திக்க வேண்டி வரும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறிவருகின்றனர்.
ஆனால் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி பார்முக்கு வந்து விடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது, இந்திய அணி, பாகிஸ்தானை 28ம் தேதி சந்திக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.