செஸ் ஒலிம்பியாடில் பதக்கம் பெற்ற ஹரிகா துரோணவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

Share

செஸ் வீராங்கணை ஹரிகா துரோணவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர் சமீபத்தில் செஸ் ஒலிம்பியாடில் மகளிர் அணியின் இந்தியா ஏ சார்பில் பங்கேற்று வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த மாதம் 28-ம் தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றதால் தமிழக அரசு கோலகலமாக தொடக்க போட்டியை நிகழ்த்தியது.  44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை பிரதமர் நரேந்திர மோடி சென்னை நேரு அரங்கில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர், அமைச்சர், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் ‘பி’ மற்றும் மகளிர் ‘ஏ’ அணிகள் வெண்கலப் பதக்கத்தை வென்றன. இதில் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியில் இடம் பெற்றவர் ஹரிகா துரோணோவள்ளி. ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த இவர் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆகஸ்டு 9ஆம் தேதி குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தேதி குறித்திருந்த நிலையிலும், இந்திய நாட்டிற்காக செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்றார்.

 

இது குறித்து ஏற்கனவே பேசியிருந்த ஹரிகா, “இந்த வருடம் செஸ் ஒலிம்பியாடில் நான் ஆரோக்கியத்துடன் இருந்தால் பங்கேற்கலாம் என எனது மருத்துவர் சொன்னதிலிருந்து, நான் நிச்சயம் ஒலிம்பியாடில் வென்றாக வேண்டும் என உறுதியாக இருந்தேன். வளைகாப்பு, விருந்து, கொண்டாட்டங்கள் என எதும் இப்போது வேண்டாம். ஒலிம்பியாடில் வென்ற பிறகு தான் என தீர்க்கமாக முடிவெடுத்தேன்” என கூறியிருந்தார்.

Read Also : செஸ் ஒலிம்பியாடில் வெற்றி பெற்றால் தான் வளைகாப்பு – ஜெயித்து காட்டிய இந்திய வீராங்கனை

விளையாட்டின்போது நாற்காலியில் அமரவும் முடியாமல், நீண்ட நேரம் நிற்கவும் முடியாமல் சிரமப்பட்டாலும் தனது அணியை வெற்றியை நோக்கி நகர்த்துவது மட்டுமே நோக்கமாக விளையாடிய ஹரிகா துரோணவள்ளிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. தான் சொன்ன படியே ஒலிம்பியாடில் வெற்றி பெற்ற ஹரிகா துரோணவள்ளிக்கு குழந்தை பிறந்தது அனைவருக்கும் மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com