`புலி இருப்பதை மறந்துவிட்டு, டிராவிட்டையே பார்த்துக் கொண்டிருந்தனர்’- நினைவுகள் பகிரும் ராஸ் டெய்லர் | ‘owner slapped me’ ross taylor shares his days of ipl

Share

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் இந்த வருட தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து கடந்த வாரம் தன் சுயசரிதை நூலை வெளியிட்டார் அவர். அதில் தன் கிரிக்கெட் வாழ்வு தொடங்கி சக அணி வீரர்கள் மற்றும் எதிரணி குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ‘ப்ளாக் அண்ட் வைட்’ எனும் தலைப்பிலான தன் சுயசரிதை நூலில் நிறப்பாகுபாட்டால் தான் பாதிக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து பகிர்ந்துள்ளார். மேலும் நியூஸிலாந்தில் கிரிக்கெட் போட்டி என்பது வெள்ளை நிறத்திலிருப்பர்களுக்கென்றும், நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் கருப்பு நிறத்தவர்கள் மீது தீண்டாமையை கடைபிடிக்கும் என்றும் தமக்கு நடந்த சம்பவங்களையும் நினைவுகூர்ந்துள்ளார் டெய்லர்.

Ross Taylor

Ross Taylor
MICHAEL BRADLEY

இது தவிர ஐ.பி.எல் தொடரில் தான் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றியும், ராகுல் டிராவிட் குறித்தும் பகிர்ந்துள்ளார் அவர். “ஒருமுறை நானும் டிராவிடும் ரந்தம்பூர் தேசிய பூங்காவிற்கு புலிகளைப் பார்க்க சென்றிருந்தோம். அப்போது நான் அவரிடம், ‘இதற்கு முன்பு புலியை நேரில் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘இதற்கு முன்பு 21 முறை புலியை பார்க்க சென்றிருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட பார்த்ததே இல்லை’ என்றார். இதை கேட்டவுடன் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 21 முறை புலியை பார்க்க முடியாமல், 22 வது தடவையாக யாராவது என்னை அழைத்திருந்தால், நான் வேண்டாம் டிஸ்கவரி சேனலிலேயே பார்த்து விடுகிறேன் என்று மறுத்திருப்பேன். அன்று மதியம் புலியை பார்க்க சென்றபோது ஏகப்பட்ட கூட்டம். எல்லாரும் புலி இருப்பதை மறந்துவிட்டு, டிராவிடையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் புலியையே பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கு தெரிந்து உலகில் மொத்தம் ஏறத்தாழ 4000 புலிகள் இருக்கலாம். ஆனால் ஒரேயொரு ராகுல் டிராவிட் தான் இருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com