India’s FTP takeaways: marquee five-Test series, more T20Is, fewer ODIs, 3-வது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

Share

2023-27ம் ஆண்டு சுழற்சிக்கான ஐசிசி எதிர்கால கிரிக்கெட் அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன, இதில் இந்தியாவுக்கு அடுத்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் கடினமான வெளிநாட்டுத் தொடர்கள் இடம்பெற்றுள்ளன.

அதே வேளையில் மார்ச்-மே வரை ஐபிஎல் சாளரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 3ம், 4ம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் இந்தியாவுக்கு கடினமாக அமைந்துள்ளன.

அடுத்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டு ஆடுகிறது. 2025-27 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணி, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறுவதே புள்ளிகளைப் பெற்று தரும், ஆனால் அந்தந்த அணிகள் தங்கள் நாட்டில் வலுவாக இருக்கும் என்பதால் இந்திய அணிக்குக் கடினமே.

ஆனால் 2023-25 சுழற்சியில் இந்தியாவுக்கு பங்களாதேஷ், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் வருகின்றன. 2025-27 சுழற்சியில் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டிஸ் அணிகள் வருகின்றன.

மொத்தத்தில் 2023-27 ஆண்டுகள் காலக்கட்டத்தில் இந்தியா மொத்தம் 141 சர்வதேசப் போட்டிகளில் ஆடுகிறது. வங்கதேசம் 150 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் 147 போட்டிகளிலும் ஆடுகின்றன.

மேலும் கடைசியாக ஆஸ்திரேலியாவில் இந்தியா 1992 தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது, இப்போது மீண்டும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இங்கிலாந்திலும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான 2023-25 சுழற்சியில் இந்தியா அங்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் ஆடுகிறது. பிறகு ஆஸ்திரேலியா 2025-27-ல் இந்தியாவில் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆடுகிறது.

இதோடு 5 டி20 போட்டிகள் கொண்ட 8 தொடர்களில் ஆடுகிறது இந்தியா.ஆனால் 2023-27 சுழற்சியில் இருதரப்பு ஒருநாள் தொடர்களில் 3 போட்டிகளில் மட்டுமே ஆடுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com