Ricky Ponting’s blunt verdict on Mohammed Shami’s Asia Cup snub, ஷமியை விட ‘பெட்டர்’ பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர்

Share

இந்திய வேகப்பந்து வீச்சின் முன்னோடியான முகமது ஷமியை ஆசியக் கோப்பைக்கும் எடுக்கவில்லை, ஜிம்பாப்வே தொடருக்கும் எடுக்கவில்லை, ஷமியை ஒழிப்பதற்கான வேறுபலதரப்பட்ட காரணங்கள் இன்று சர்ச்சையாகப் பேசப்பட்டு வரும் நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வேறு ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

2021 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகே ஷமி இந்திய டி20 அணியில் இடம்பெறவில்லை. ஷமி போன்ற ஒருபவுலரை உட்கார வைப்பது பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தும் நிலையில் ரிக்கி பாண்டிங் அவர் டி20 உலகக்கோப்பைக்கு வருவார், ஆனால் இந்திய அணியில் அவரை விட சிறந்த டி20 பவுலர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிராக கடைசியாக ஆடினார் ஷமி, அதன் பிறகு இந்திய அணியினர் 11 வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியுள்ளனர். புவனேஷ்வர் குமார் தொடர்ந்து ஆடுகிறார். ஆனால் ஷமி இல்லை.

இது தொடர்பாக ஐசிசி ரிவியூ நிகழ்ச்சியில் ரிக்கி பாண்டிங், சஞ்சனா கணேசனிடம் பேசும் போது, “டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி பிரமாதமாக வீசி வருகிறார். டி20 கிரிகெட்டைப் பொறுத்தவரை இந்திய அணியிடம் இன்னும் திறமை வாய்ந்த வீரர்கள் குழு உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் ஷமியின் பலம் உள்ளது.

ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஷமியை விட பெட்டர் பவுலர்கள் இந்திய அமைப்பில் உள்ளனர். அதில் 3 பேரை ஆசியக் கோப்பைக்கு அறிவித்துள்ளனர், 4வது பவுலரை எடுக்க முடியும் என்றால் அது ஷமியாக இருப்பார்.

ஒருவேளை ஆஸ்திரேலியாவுக்கு டி20 உலகக்கோப்பைக்கு வரும் இந்திய அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் ஷமி இடம்பெறலாம். ஸ்பின் பவுலிங்குக்கு ஆஸ்திரேலிய பிட்ச்கள் தோதாக இருக்காது. அப்போது ஷமியை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது” என்கிறார் ரிக்கி பாண்டிங்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com