Unless Players or support staffs including coaches cut their all contracts with bcci can play in other t20 leagues – News18 Tamil

Share

ஐபிஎல் என்ற பிக்பாஸ் ரக தனியா லீகுகளில் ஒரு அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டால் இந்திய வீரர்கள் பிசிசிஐ-உடன் ஒப்பந்தத்தை முறியடித்துக் கொண்டால்தான், அல்லது ஓய்வு பெற்றால்தான் வெளிநாட்டு லீகுகளில் இந்திய வீரர்கள் ஆட முடியும் என்று பிசிசிஐ அதிரடியாகக் கூறியுள்ளது.

இது நீண்டகாலமாக இருக்கும் விதிமுறைதான், இப்போது தென் ஆப்பிரிக்கா டி20 லீக், யுஏஇ டி20 லீகுகளில் இந்திய ஐபிஎல் உரிமையாளர்கள் அணிகளை வாங்குகின்றனர், ஏற்கெனவே கரீபியன் பிரிமியர் லீகில் இந்திய ஐபிஎல் ஓனர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையும் கைகோர்த்தது நாம் அறிந்ததே. இப்போது பெரிய ஓனர்களான ரிலையன்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ் போன்றவை வெளி நாட்டு லீகுகளிலும் இறங்குவதால் அவர்களுக்கு ஆடும் இந்திய வீரர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது நியாயம்தானே. ஆனால் அது நடக்காது என்கிறது பிசிசிஐ.

அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் தென் ஆப்பிரிக்காவில் நடக்க உள்ள 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான 6 அணிகளில் ஜொகான்னஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது. கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்சும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணியை ஐதராபாத் சன்ரைசர்சும், பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்சும், பிரிட்டோரியா அணியை டெல்லி கேப்பிட்டல்சும் வாங்கியுள்ளது. இந்த தொடர்களில் விளையாடும் வீரர்கள் மற்றும் ஊழியர்களை ஐபிஎல் அணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களைக் கொண்டு பயன்படுத்திக் கொள்ள ஐபிஎல் அணிகள் திட்டம்போட்டன. இந்த முடிவு பிசிசிஐ-ன் காதுகளுக்கும் சென்றதும், ஐபிஎல் அணிகளின் இந்த முடிவுக்கு எதிராக அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் விளையாடும் எந்தவொரு இந்திய மற்றும் உள்ளூர் வீரரும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் வெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகளில் பங்கேற்க கூடாது எனத் தெரிவித்துள்ளது. பிசிசிஐ உடனான அனைத்து விதமான ஒப்பந்தங்களையும் முடித்துக் கொண்ட பின்னரே வெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகளில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

காரணம் பிராண்டிங் தான். விளம்பரம்தான், பணம் தான்!! இந்திய வீரர்கள் சுதந்திரமாக வெளிநாட்டு லீகுகளில் ஆட வேண்டுமென்றால் ஓய்வு பெற்றால்தான் உண்டு, அதாவது அனைத்து விதமான பிசிசிஐ தொடர்புகளையும் ஐபிஎல் தொடர்பு உட்பட துறந்தால் மட்டுமே வெளிநாட்டு லீகுகளில் இடம்பெற முடியும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com