அப்சல்யூட் லெஜண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் என்பதுதான் இந்த லெஜண்ட்ஸ் லீகை நடத்துகிறது, இதன் ஆணையர் ரவி சாஸ்திரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்திய மகாராஜாஸ் அணியில் கங்குலி தலைமையில் சேவாக், கைஃப், பதான் சகோதரர்கள், ஹர்பஜன் சிங் ஆகியோர்களும் கைகோர்க்கின்றனர். இவர்கள் அனைவருமே கங்குலி கேப்டன்சியில் ஆடியவர்கள்.
ஆறுதலான விஷயம் ஸ்ரீசாந்த் இதில் ஆடுகிறார். இவர் தடை நீக்கப்பட்ட பிறகு இவர் சர்வதேச கிரிக்கெட், உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்று விட்டார்.
லெஜண்ட்ஸ் லீகின் முதல் போட்டித் தொடர் இந்த ஆண்டு ஜனவரியில் ஓமானில் நடந்தது.மகாராஜாஸ், ஜெயண்ட்ஸ், ஆசியா லயன்ஸ் ஆகிய அணிகள் மோதின. லயன்ஸுக்கு எதிரான ஹை ஸ்கோரிங் மேட்சில் உலக ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த முறை 4 அணிகள் மோதுகின்றன. மொத்தம் 15 போட்டிகள்.
செப்டம்பர் 16ம் தேதி மோதும் இந்திய மகாராஜஸ் அணி: கங்குலி (கேப்டன்), சேவாக், மொகமட் கைஃப், யூசுப் பத்தான், எஸ்.பத்ரிநாத், இர்பான் பதான், பார்த்திவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, அசோக் டிண்டா, பிராக்யன் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்.பி.சிங், ஜொஹிந்தர் சர்மா, ரிதீந்தர் சிங் சோதி.
வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி: மோர்கன் (கேப்டன்), லெண்டில் சிம்மன்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ஜாக் காலிஸ், சனத் ஜெயசூரியா, மேட் பிரையர், நேதன் மெக்கல்லம்,ஜாண்ட்டி ரோட்ஸ், முரளிதரன், டேல் ஸ்டெய்ன், ஹாமில்டன் மசகாட்சா, மஷ்ரபே மோர்டசா, அஸ்கர் ஆப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, கெவினோ பிரையன், தினேஷ் ராம்தின்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.