MI Emirates’ and ‘MI Cape Town’: Reliance Industries Unveils Brand Names of 2 New T20 Teams – WATCH, எம்ஐ எமிரேட்ஸ், எம்ஐ கேப்டவுன்

Share

மும்பை இந்தியன்ஸின் உரிமையாளர்களான ரிலையன்ஸ் நிறுவனம் மும்பை இந்தியன்ஸ் #OneFamily இல் இணைந்த இரண்டு புதிய கிரிக்கெட் அணிகளின் பெயர் மற்றும் பிராண்ட் அடையாளத்தை இன்று வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சர்வதேச லீக் டி20யில் ‘எம்ஐ எமிரேட்ஸ்’ மற்றும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் ‘எம்ஐ கேப் டவுன்’ ஆகியவை அணிகளை அறிமுகம் செய்தது.

தென் ஆப்பிரிக்காவில் தொடங்கும் புதிய டி20 லீக் அணி மை கேப்டவுன் என்றும் எமிரேட்ஸில் தொடங்கும் புதிய டி20 லீக் மை எமிரேட்ஸ் எனவும் பெயர் பெற்றுள்ளது. அதாவது எம்.ஐ. என்றால் மை என்ற ஒலிக்குறிப்பு ஒற்றுமையின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது.

‘எம்ஐ எமிரேட்ஸ்’ மற்றும் ‘எம்ஐ கேப் டவுன்’ – இந்த பெயர்கள் அணிகள் சார்ந்த பகுதிகளை அழைப்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டன. ‘MI எமிரேட்ஸ்’ அல்லது எம்ஐ கேப்டவுன்” என்பது ‘MY கேப் டவுன்’ My Emirates என்று தொனிப்பதாக அமைந்துள்ளது, இந்த 2 அணிகளையும் ரிலையன்ஸ் முறையே எமிரேட்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு அர்ப்பணித்துள்ளது.

பிரான்சைஸ் கிரிக்கெட்டில் ‘ஒரே குடும்பம்’ என்பதை அடையாளப்படுத்தும் விதமாகவும் மும்பை இந்தியன்ஸ் என்ற பிரான்சைஸ் உலகம் முழுதும் நேசிக்கப்படும் ஒரு அணியாகவும் இருக்க இந்த 2 அணிகளையும் அறிமுகம் செய்துள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குநர் நீதா அம்பானி இது தொடர்பாகக் கூறும்போது, “எம்.ஐ. எமிரேட்ஸ் மற்றும் எம்.ஐ. கேப்டவுன் அணிகளை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எங்களின் ‘ஒரே குடும்பம்’ என்ற மதிப்பீட்டில் இணையும் 2 அணிகளையும் வரவேற்கிறோம். மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட்டையும் கடந்து சென்று விட்டது. வாழ்க்கையை கனவுடனும், அச்சமில்லாமலும் தன்னம்பிக்கையுடனும் நடத்தும் மனோபாவத்தின் அடையாளமே மும்பை இந்தியன்ஸ்.

ரிலையன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமாகும், இது INR 792,756 கோடி ($104.6 பில்லியன்)மொத்த வருவாய் உள்ள நிறுவனம். , ரொக்க லாபம் INR 110,778 கோடி ($14.6 பில்லியன்) உடைய நிறுவனமாகும். மற்றும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டில் INR 67,845 கோடி ($9.0 பில்லியன்) நிகர லாபம் ஈட்டியுள்ளது. ரிலையன்ஸின் செயல்பாடுகள் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி, பெட்ரோலியம் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல், பெட்ரோ கெமிக்கல்ஸ், சில்லறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவையாகும்.

2022 ஆம் ஆண்டிற்கான ஃபார்ச்சூனின் குளோபல் 500 பட்டியலில் இடம்பெற்றுள்ள உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ரிலையன்ஸ் 104 வது இடத்தைப் பிடித்தது, இது இந்தியாவின் முதல் தரவரிசையில் உள்ள தனியார் துறை நிறுவனமாகும். இந்திய நிறுவனங்களில் முதன்மையானது. இது LinkedIn இன் ‘இந்தியாவில் பணியாற்றுவதற்கான சிறந்த நிறுவனங்களில்’ (2021) இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com