72 நாடுகள் பங்கேற்ற 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. அதில் இந்திய வீரர்கள் மிக விமர்சையாக விளையாடி 61 பதக்கங்களைக் குவித்தனர். இந்த போட்டியில் 3 தங்கம் 1 வெள்ளி என்று 4 பதக்கங்களுடன் அசத்தியவர் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல். முதல் ஆட்டத்தில் டேபிள் டென்னிஸ் ஆடவர் குழு போட்டியில் இந்திய ஆடவர் குழுவுடன் இணைந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
அதைத் தொடர்ந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் சக தமிழக வீரர் சத்யன் உடன் இணைந்து விளையாடி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா என்ற வீரகனையுடன் இணைந்து மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றார். இறுதியாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லியாம் பிட்ச்ஃபோர்ட் என்ற வீரரை இறுதிக் கட்டத்தில் 4க்கு 1 என்று வீழ்த்தி தங்கம் வென்று இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் டேபிள் டென்னிஸ் வரலாற்றில் தனது 40 வயதில் சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்துள்ளளார்.
Also Read : காமன்வெல்த்: 22 தங்கப் பதக்கத்துடன் இந்தியா 4வது இடம்
மூத்த டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரராக வலம் வரும் சரத் கமல் 1982 ஜூலை 12இல் சென்னையில் பிறந்தவர். டேபிள் டென்னிஸ் என்பது இவரின் குடும்பத்திலிருந்தே வந்துள்ளது. இவரின் அப்பாவும் டேபிள் டென்னிஸ் வீரராக இருந்து பயிற்சியாளராக மாறியவர். சரத் கமல் தனது நான்கு வயதில் டேபிள் டென்னிஸ் உலகத்தில் நுழைந்தார். இளைஞரான பிறகு இன்ஜினீயர் அல்லது முழு நேர டேபிள் டென்னிஸ் வீரர் என்ற சூழலில் டேபிள் டென்னிஸ்சை தேர்ந்தெடுத்தார்.
அந்த முடிவு தற்போது இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளது. முதல் போட்டியாக 2002 காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். 2003 இல் முதல் தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து வரலாற்றுப் பதிவாக 2006 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். அதே போட்டியில் ஆடவர் குழு பிரிவில் மேலும் ஒரு தங்கம் வென்றார்.
2010இல் எகிப்து ஓபன் போட்டியில் கலந்துகொண்டு ITTF ப்ரோ டூர் பட்டம் வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் என்ற கவுரவத்தைப் பெற்றார். அதே ஆண்டு காமன்வெல்த் விளையாட்டிலும் மேலும் இரண்டு தங்கம் வென்றார்.
இது எல்லாம் ஆரம்பம் தான் என்றது போல் 2018 காமன்வெல்த் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் வென்று சாதனை படைத்தார். மேலும் அதே ஆண்டு ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்றார். 2019 இல் உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் 30வது இடத்தை பிடித்தார்.
Also Read : தங்க மங்கை பி.வி.சிந்து போட்டோவை பகிர்ந்த டேவிட் வார்னர் – மனைவி ரியாக்ஷன்
2020 இல் தனது 37 வயதில் ஓமென் ஓபன் போட்டியில் இரண்டாவது முறை டேபிள் டென்னிஸ் சர்வதேச சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். வயது ஏறினாலும் கொஞ்சம் கூட தளராது உலக டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் சரத் கமல் 2021 ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் வெண்கலம் வென்று பதக்க பட்டியலை நீடித்துக்கொண்டே செல்கிறார்.
தற்போது நடைபெற்ற 2022 காமன்வெல்த் போட்டியில் 4 பதக்கங்களைக் குவித்து தமிழக வீரராக இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக 2004இல் இந்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது அளித்தது. மேலும் 2019இல் இவருக்குப் பத்ம ஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.