சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்யாமல் ஒழித்தது ட்விட்டர் வாசிகளிடையே கடும் கோபத்தை அதிகரித்துள்ளது. கே.எல்.ராகுல் அறுவை சிகிச்சை, காயத்துடன் வந்துள்ளார், விராட் கோலி படுதண்டமான பார்மில் இருக்கிறார். ஒன்றுமே அவருக்கு ஆட வரவில்லை, ஆனால் இருவரையும் 2025 வரை சுற்றிவளைத்துள்ள கார்ப்பரேட் ஸ்பான்சர்களால் இடம்பெற்றுள்ளனர். சஞ்சு, குல்தீப் யாதவ், இஷான் கிஷன் அணியிலிருந்து புறமொதுக்கப்பட்டனர்.
2022-ம் ஆண்டு டி20 சர்வதேசப் போட்டிகளில் விக்கெட் கீப்பர்களின் ஆட்டத்தை பார்த்தோமானால் சஞ்சு சாம்சன் 158.40 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 44.75 என்ற சராசரியில் ரன்களை எடுத்து முதலிடத்தில் இருக்கிறார்.
இவருக்கு அடுத்துதான் இஷான் கிஷன் 130.40 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 30.71 என்ற சராசரியில் ஸ்கோரை எடுத்துள்ளார்.
அடுத்த இடத்தில்தான் ரிஷப் பண்ட் 135.42 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெறும் 26 ஆவரேஜ். கடைசியாக தினேஷ் கார்த்திக் 133 ஸ்ட்ரைக் ரேட், ஆவரேஜ் 21. சிறப்பாக ஆடியது சஞ்சு சாம்சன் அடுத்து இஷான் கிஷன், ஆனால் அணியில் இருப்பது ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக். என்று ட்விட்டர் வாசிகள் கொதிப்படைந்துள்ளனர்.
Performance of Wicketkeepers in T20is in 2022
SANJU-158.40 SR& 44.75 AVG
ISHAN-130.30 SR& 30.71 AVG
PANT-135.42 SR& 26 AVG
DK-133.33 SR& 21.33 AVGBest performers- Sanju Samson and Ishan Kishan.
Picked in Asia Cup- Pant and DKDoes that make sense?#AsiaCup2022 #Sanjusamson pic.twitter.com/hCgIxOKmd2
— Anurag (@Right2Gaps) August 8, 2022
It’s pure Injustice to Sanju Samson
By BCCI selectors side lining him every now & Then! It’s up to Ashwin now that he has the ability to Take Wickets as well Dry runs against Quality spin players from Pakistan Sri Lanka & B’desh in Asia Cup 2022#AsiaCup2022#IndianCricketTeam pic.twitter.com/HcaveQyXnF— MTvalluvan (@MTvalluvan) August 8, 2022
An expected exclusion from asia cup squad but the real stroy behind is.👇🏻#sanjusamson #AsiaCup2022#TeamIndia pic.twitter.com/CyDdMfCnsD
— Mahi Bishnoi (SanjusamsonFan) (@Sanjusamsonf11) August 8, 2022
Not a fan Sanju Samson but he should have been playing instead of Hooda. https://t.co/M0vLGxNnfa
— °• Chenae •° (@chenae876) August 8, 2022
Not a fan Sanju Samson but he should have been playing instead of Hooda. https://t.co/M0vLGxNnfa
— °• Chenae •° (@chenae876) August 8, 2022
India does not deserve player like Sanju Samson 🫂
Hard luck champp💔#SanjuSamson pic.twitter.com/bVpeBbg3Hn— Madhan tam (@Madhantam) August 8, 2022
ஆசியக் கோப்பை இந்திய அணி வருமாறு:
ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அஸ்வின், செஹல், பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான்.
ஸ்டாண்ட் பை வீரர்கள்: அக்சர் படேல், ஷ்ரேயஸ் அய்யர், தீபக் சாஹர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.