India at CWG, Day 9 Live: தடகளத்தில் நான்காவது பதக்கம்!அவினாஷிற்கு வெள்ளி! 10km Race walk-ல் பிரியங்காவிற்கு வெள்ளி!

Share

மல்யுத்தத்தில் எட்டாவது பதக்கம் உறுதி!

Wrestling – Men’s 57 kg: ரவி குமார் 14-4 என்ற கணக்கில் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் ரவிக்கு பதக்கம் உறுதியானது

Women’s Cricket: இந்தியா vs இங்கிலாந்து (அரையிறுதி)

முதலில் பேட் செய்த இந்தியா அணி 164 ரன்கள் குவிப்பு. அதிகபட்சமாக ஸ்ம்ரிதி 61 ரன்களையும் ஜெமிமாஹ் 44 ரன்களும் எடுத்தனர்!

Wrestling – Men’s 97 kg: தீபக் நெஹ்ரா காலிறுதியில் தோல்வி!

மல்யுத்தத்தில் மற்றொரு பதக்கம் உறுதி!

Wrestling – Men’s 74 kg: நவீன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார்!

Wrestling – Women’s 76 kg: பூஜா சிஹாக் அரையிறுதியில் தோல்வி!

Wrestling – Men’s 57 kg: ரவி குமார் 74 நொடிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

வெள்ளிப் பதக்கத்துடன் பிரியங்கா கோஸ்வாமி!

Women’s 4 x 100m relay: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது!

கடைசி ஆறு காமன்வெல்த் தொடர்களிலும் 3000m steeplechase-ல் தங்கம், வெள்ளி, வெண்கலம் என அனைத்து பதக்கங்களையும் கென்யாவை சேர்ந்த வீரர்கள் வாங்கி வந்தனர்! இப்போது அதுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இந்தியாவின் அவினாஷ் சாப்லே!

தடகளத்தில் இந்தியாவிற்கு நான்காவது பதக்கம்!

Men’s 3000m Steeplechase: வெள்ளிப் பதக்கம் வென்றார் அவினாஷ் முகுந்த் சாப்லே!

0.05 நொடிகளில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார் அவினாஷ்!

காமன்வெலத் வரலாற்றில் 3000m steeplechase போட்டியில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் பதக்கம் இது!

Table Tennis Men’s singles – சத்யன் ஞானசேகரன் காலிறுதியில் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

Table Tennis Men’s singles – சனில் ஷெட்டி காலிறுதியில் 1-4 என்ற கணக்கில் தோல்வி!

Women’s Women’s 76 kg: பூஜா சிஹக் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

Wrestling Men’s 74 kg – நவீன் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

Women’s Freestyle 76 kg: பூஜா சிஹக் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

Wrestling, women’s 53kg: இரண்டாவது போட்டியிலும் வினேஷ் போகத் வெற்றி! இன்னும் ஒரு போட்டியில் வென்றால் தங்கப்பதக்கம் கிடைக்கும்!

காமன்வெல்த் வரலாற்றில் Race walk-ல் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார் பிரியங்கா!

இந்தியாவுக்கு 27வது பதக்கம்!

வரலாறு படைத்தார் பிரியங்கா!

Women’s 10 km Race walk: 43:38.82 நிமிடத்தில் 10கிமீ தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார் பிரியங்கா!

Men’s Boxing – 48kg-51kg: அமித் பங்கல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்!

Athletics – women’s 10 km race walk: 7 கிலோமீட்டர் முடிவில் இந்தியாவின் பிரியங்கா மூன்றாவது இடம்.

Wrestling, Men’s 74kg: நவீன் சிஹக் 13-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

Wrestling, women’s 50kg: பூஜா கேலோத் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

Boxing, Women’s 48kg: நீத்து கன்காஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்!

Wrestling, women’s 53kg: முதல் போட்டியில் வினேஷ் போகட் 36 நொடிகளில் வெற்றி!

Table tennis Men’s singles: தமிழக வீரர் ஷரத் கமல் காலிறுதியில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்!

Table tennis Women’s doubles: ஸ்ரீஜா-ரீத் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

Table tennis Women’s doubles: மணிக்கா – தீயா ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com