ஜிம்பாப்வேவிற்கு எதிராக பங்களாதேஷ் அணி சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று டி20 போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. டி20 தொடர் முடிந்த நிலையில், தொடரை ஜிம்பாவே அணி வென்றுள்ளது. தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில், ஜிம்பாப்வே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது,
Also Read : ஊக்கமருந்து விவகாரம்.. தனலட்சுமிக்கு 3 ஆண்டு தடை.. பதக்கங்கள் பறிக்கப்படும்
தொடக்கத்தில் ஜிம்பாப்வே சற்று தடுமாற்றத்துடன் தங்களது இன்னிங்ஸை தொடங்கியது. 13 ஓவர்களில் 67 ரன்களை எடுத்து 6 விக்கட்டுகளை இழந்தது. இந்த போட்டியில், ரியான் பர்ல் ரஙளை எடுக்க சற்று நேரமெடுத்துக்கொண்டாலும், நாசும் அகமது வீசிய 15ஆவது ஓவரில், 5 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என அந்த ஓவரில் 34 ரன்களை எடுத்தார்.
6️⃣6️⃣6️⃣6️⃣4️⃣6️⃣
Not an over we usually see! Truly unbelievable batting from @ryanburl3!Watch all the action from the Bangladesh tour of Zimbabwe LIVE, exclusively on #FanCode 👉 https://t.co/Kv4t1gRRPB @ZimCricketv @BCBtigers#ZIMvBAN pic.twitter.com/fqPsdbBmUV
— FanCode (@FanCode) August 2, 2022
இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவரின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்தது. நாசும் அகமது வீசிய அந்த ஓவரால், ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுகொடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை வாஷிங்டன் சுந்தருடன் பகிர்கிறார். வாஷிங்டன் சுந்தர் 2020யில் நியுசிலாந்திற்கு எதிராக 34 ரன்களை விட்டுகொடுத்தார்.
முதலிடத்தை இன்னுமும் ஸ்டுவர்ட் பிராடும், இலங்கையின் பந்துவீச்சாளர் அகில தனஞ்ஜெயாயும் பகிர்கிறார்கள். 2007யில் யுவராஜ் சிங் ஸ்டுவர்ட் பிராட் ஓவரில் 36 ரன்களை எடுத்ததும், கைரன் பொலார்டு இலங்கை பந்துவீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா ஓவரில் 36 ரன்களை எடுத்ததால் இந்த இரண்டு பந்துவீச்சாளர்களும் முதலிடத்தை பகிர்கிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.