TNPL 2022 : டி.என்.பி.எல் 2022 கோப்பையை பகிர்ந்த சேப்பாக் மற்றும் கோவை அணிகள்..! Chepauk Super Gillies, Lyca Kovai Kings share TNPL trophy

Share

கோவையில் நடைபெற்ற டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி போட்டியில் மழை குறுக்கிட்டதை தொடர்ந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிக்கு கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது.

கோவை ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு பிரிமீயர் லீக்  கிரிக்கெட் இறுதி போட்டியில்  நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் மோதின. இதனிடையே போட்டித்தொடங்கும் முன் கோவையில் பலத்த மழை பெய்தது. இதனால் இரவு 7.15 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 2 மணி நேரம் காலதாமதமாக 9.15 மணிக்கு தொடங்கியது. இதன்காரணமாக போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் கவுசிக் காந்தி பீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க வீரர்களாக கங்கா ஸ்ரீதர் ராஜூ, விக்கெட் கீப்பர் சுரேஷ் குமார் ஜோடி களம் இறங்கினர்.

சந்தீப்வாரியர் வீசிய பந்தில் சுரேஷ் குமார் (5 ரன்கள்) அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். 17 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகள், சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகள், சோனு யாதவ் 2 விக்கெட்டு வீழ்த்தினர்.

ALSO READ | காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்

இதனை தொடர்ந்து 139 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியினர் களம் இறங்கினர். அந்த அணியின் கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன் ஜோடி களமிறங்கியது. கவுசிக் காந்தி 1 ரன் எடுத்திருந்த போது அஜித் ராம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

 

தொடர்ந்து யுதீஸ்வரன் பந்து வீச்சில் ஜெகதீசன் (2 ரன்) ஆட்டமிழந்து வெளியேறினார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மைதானத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது ராதாகிருஷ்ணன் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார். டக் வொர்த் லீவிஸ் விதிப்படி 5 ஓவர்கள் வீசியிருந்தால் மட்டுமே எந்த அணிக்கு கோப்பை என்று அறிவிக்க முடியும்.

ஆனால் மழையினால் 4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டதால் கோப்பை சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து டிஎன்பிஎல் 2022 கோப்பையை சேப்பாக் மற்றும் கோவை அணிகள் பகிர்ந்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com