is it ok to drink milk after having fish explains doctor

Share

ஒரு சில உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடக் கூடாது என்று கூறுவதுண்டு. ஆயுர்வேத மருத்துவ முறை முதல் நவீன மருத்துவம் வரை, உணவின் தன்மைகள் ஒன்றோடொன்று முரண்படுவதால், உணவு விஷமாகும் ஆபத்து உள்ளது. எனவே, சில உணவுகளை ஒன்றாக அல்லது அடுத்தடுத்து சாப்பிடக் கூடாது. அதில் முக்கியமானது, மீன் மற்றும் பால். மீன் மற்றும் பாலை ஒன்றாக சாப்பிடக் கூடாது அல்லது மீன் உணவுகள் சாப்பிட பிறகு பால் குடிக்கக் கூடாது என்று பாட்டி காலத்தில் இருந்தே கேள்விப்பட்டிருப்பீர்கள். அது எவ்வளவு உண்மை என்று மருத்துவர்கள் விளக்கியுள்ளார்கள்.

மீன் மற்றும் பால் ஒன்றாக சாப்பிடும் போது சரும அலர்ஜி ஏற்படுமா?

மீன் மற்றும் பாலை ஒன்றாக சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் என்பது பொதுவாக கூறப்படுவதாகும். ஆனால், அறிவியல் பூர்வமாக, அதற்கு சான்று இல்லை, மீன் சாப்பிடும் போது பால் குடிப்பது உடலுக்கு ஆபத்தை உண்டாக்காது. ஆனால், உங்களுக்கு மீன் அல்லது பால் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் என்றால், இவற்றை சேர்ந்து சாப்பிடும் போது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர் சித்தாந்த் பார்கவா ஒரு வீடியோவில் விளக்கியுள்ளார்.

ஆயுர்வேதம் கூறுவது என்ன?

ஆயுர்வேத மருத்துவத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு உணவிற்கும் ஒரு தன்மை இருக்கிறது. சில உணவுகள் குளிர்ச்சியாகவும், சில உணவுகள் காரமாகவும், சில உணவுகள் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும் என்றும் உணவுகளில் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பால் என்பது குளிர்ச்சி தன்மை கொண்ட உணவாகும். மீன் என்பது உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவாகவும் கூறப்படுகிறது. எனவே இரண்டு எதிரெதிர் குணங்களை உணவுகளை சாப்பிடக்கூடாது என்ற வழிமுறையின்படி மீன் மற்றும் பாலை ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.

மீன் மற்றும் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரம் :

பால் மற்றும் மீன் இரண்டும் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் இந்த இரண்டு உணவுகளிலுயும் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பல நாடுகளில் விரைவாக குணம் பெற வேண்டும் என்பதற்கு பால் உணவுகள் மற்றும் மீன் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். அதுமட்டும் அல்லாமல் ஒரு சில வகையான மீன் உணவுகளை தயாரிக்கும் போது அவை தயிர் மற்றும் பாலுடன் சேர்த்து தான் தயாரிக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மழைக்காலங்களில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

பொதுவாக இந்த இரண்டு உணவுகளுமே புரதம் நிறைந்ததாகும். ஆனால் இரண்டு உணவும் வெவ்வேறானவை. இவை ஜீரணம் ஆவதற்கு வெவ்வேறு செரிமான அமிலங்கள் தேவைப்படுகின்றன. எனவே தான் இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது இந்த உணவு செரிமானம் ஆக, வெவ்வேறு அமிலங்கள் சுரக்கும்போது உடலில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இவை அலர்ஜியாக வெளிப்படுகிறது அல்லது வேறு ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுகிறது. மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது.

பொதுவாக கூறப்படும் அளவுக்கு பால் மற்றும் மீன் இரண்டும் நச்சுத்தன்மை நிறைந்தது கிடையாது. அதாவது உங்களுக்கு ஃபுட் பாய்சன் ஏற்படும் அளவுக்கான பாதிப்புகள் ஏற்படாது. ஆனால் ஆயுர்வேத முறைப்படி பார்க்கும்போது பல உணவு வகைகளின் கலவையை தவிர்க்க வேண்டும். அதில் தவிர்க்க வேண்டிய உணவுகளில் பால் மற்றும் மீன் உள்ளன. எனவே, உங்களுக்கு அலர்ஜி இருக்கிறதா? என்பதை மருத்துவரிடம் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com