21-ம் நூற்றாண்டின் அதிகபட்ச ஸ்கோர்- இமாலய சாதனை புரிந்த இங்கிலாந்து வீரர்

Share

இங்கிலிஷ் கவுண்டி கிரிக்கெட்டில் கிளாமர்கன் அணி வீரர் சாம் நார்த்தீஸ்ட், லீஷயர் அணிக்கு எதிராக 410 நாட் அவுட் என்ற ஸ்கோரை எட்டி 21ம் நூற்றாண்டின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரை எடுத்து மாரத்தான் சாதனை புரிந்தார். கிளாமர்கன் 795/5 என்ற ஸ்கோரை எட்டியது.

இது அனைத்து கால முதல் தர கிரிக்கெட் 9வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதே போல் 400+ ரன்களை எடுக்கும் 11வது வீரர் ஆகிறார் நார்த்தீஸ்ட். அனைத்தையும் விட இந்த 21ம் நூற்றாண்டில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர்.

32வயதாகும் சாம் நார்த்தீஸ்ட் 400 ரன்களை பவுலர் தலைக்கு மேல் சிக்ஸ் அடித்து எட்டினார், பிறகு அடுத்த பந்தே மீண்டும் ஒரு சிக்ஸ் விளாசினார்.

என்ன செய்தாலும், உடைத்தாலும் முதல் தர கிரிக்கெட் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரான பிரையன் லாராவின் 501 நாட் அவுட்டை யாராலும் முறியடிக்க முடியுமா என்பது சந்தேகமே.  பிரையன் லாரா டர்ஹாம் அணிக்கு எதிராக வார்விக்‌ஷயர் அணிக்காக இதனை அடித்தார், லாரா 1994ம் ஆண்டு அடித்தார் இந்த உலக சாதனை முதல் தர ஸ்கோரை.

பிறகு இங்கிலாந்துக்கு எதிராகவே பிரையன் லாரா 400 அடித்தார், 375 அடித்தார். இந்த நூற்றாண்டின் இன்னொரு 400 ஸ்கோர் இது , ஆனால் சாம் நார்த்தீஸ்ட் லாராவைக் கடந்து சென்று 410 அடித்து விட்டார். இவரின் 410-க்கும் லாராவின் 501 நாட் அவுட்டுக்கும் இடையே 1895ம் ஆண்டு லங்காஷயர் வீரர் ஆர்க்கி மெக்லாரன் சாமர்செட் அணிக்கு எதிராக 424 ரன்களை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

நார்த்தீஸ்ட் இந்த இவரது மாரத்தான் இன்னிங்ஸின் போது 6வது விக்கெட்டுக்காக கிறிஸ் குக் (191 நாட் அவுட்) என்பவருடன் சேர்ந்து 461 ரன்களைச் சேர்த்ததும் குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com