How Trent Boult used ‘MI captain’ Rohit Sharma’s advice to get India skipper out, இந்தியா-நியூசிலாந்து டி20 ரோகித் சர்மா சொல்லிக்கொடுத்த ட்ரிக்கை வைத்து அவரையே வீழ்த்திய போல்ட் – News18 Tamil

Share

ரோகித் சர்மா கேப்டன்சியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடிய நியூசிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட், தனக்கு ரோகித் சர்மா கொடுத்த டிப்ஸை வைத்தே அவரை வீழ்த்தினார். இதை ரோகித் சர்மாவே தெரிவித்ததுதான் ஸ்பிரிட்.

முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற கேப்டன் ரோகித் சர்மாவின் சரவெடி 48 ரன்கள் உதவியது, இவரும் சூரியகுமார் யாதவ்வும் வெற்றியை எளிதாக்கினார், ஆனால் கடைசியில் ட்ரெண்ட் போல்ட் மேட்சைத் திருப்பினார், இதனால் 24 பந்துகளில் 23 ரன்கள் என்று இருந்த வெற்றி இலக்கு ட்ரெண்ட் போல்ட் விக்கெட்டுகளினால் 18 பந்தில் 21 என்று ஆகி கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டு கடைசி 2 பந்துகள் மீதமிருக்க இந்தியா வெற்றி பெற்றது.

இதில் ரோகித் சர்மாவுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும்போது இருவரும் ஒருவரையொருவர் நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டிருந்தனர், சில தருணங்களில் ரோகித் சர்மா, ட்ரெண்ட் போல்ட்டிடம் பேட்ஸ்மெனை ஏமாற்ற வேண்டும், ஸ்லோ ஒன், நக்கிள் பால், ஃபுல் பிட்ச் என்று நினைக்கும் போது ஷார்ட் பிட்ச், ஷார்ட் பிட்ச் என்று நினைக்கும் போது யார்க்கர் என்று பேட்ஸ்மெனை ‘பிளஃப்’ பண்ண வேண்டும் என்று போல்ட்டிடம் கூறியிருக்கிறார். அதே உத்தியைப் பயன்படுத்தி நேற்று ரோகித்தையே வீழ்த்தி விட்டார் போல்ட்.

இது தொடர்பாக ரோகித் சர்மா கூறும்போது, “நானும் போல்ட்டும் நிறைய சேர்ந்து ஆடியிருக்கிறோம். என் பலவீனம் அவருக்குத் தெரியும் அவரது பலவீனம் எனக்குத் தெரியும். எங்களுக்கு இடையே எப்போதும் நல்ல போட்டி இருக்கும். அவர் என்ன வீசுவார் என்பதை நான் அறிவேன். நான் மும்பை இந்தியன்ஸுக்கு கேப்டன்சி செய்யும் போது அவரிடம் ஏமாற்ற வேண்டும் என்று கூறுவேன்.

அவர் பவுன்சர் வீசப்போகிறார் என்று எனக்குத் தெரியும். நான் பீல்டரைத் தாண்டி அடிக்க நினைத்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தேன். ஆனால் வெற்றி பெற்ற்தில் மகிழ்ச்சி.

ஐபிஎல் கிரிக்கெட் சர்வதேச வீரர்களுக்குச் செய்யும் நன்மை இதுதான், இந்திய வீரர்களும் நல்ல பாடம் கற்றுக் கொள்வார்கள், உதாரணமாக ரிக்கி பாண்டிங் போன்ற ஒருவர் கீழ் பயிற்சியில் இருப்பதன் மூலம் ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட் பெற்றது ஏராளம் என்றுதான் கூற வேண்டும், இது உள்நாட்டு கிரிக்கெட்டில் கிடைக்காது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com