அலிசன் ஃபெலிக்ஸ்: உசைன் போல்ட் சாதனையை முறியடித்தவர்; பெண்களுக்கு மகப்பேறு சலுகைகள் பெற்றுத்தந்தவர்! | The inspiring story of American track and field athlete Allyson Felix

Share

அலிசன் ஃபெலிக்ஸ்

அலிசன் ஃபெலிக்ஸ்
Ashley Landis

2020இல் கொரோனா, ஓடிக்கொண்டிருந்த மக்களை நிற்கச் செய்தது. ஆனால் அப்போதும் தெருக்களிலும் கடற்கரையிலும் காலியாக இருந்த மைதானங்களையும் பயன்படுத்தி தாயான பின்னர் களம் காணப் போகும் முதல் ஒலிம்பிக்ஸிற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார் அலிசன். ஜூன் 2021இல் அலிசன், அதாவது Nike நிறுவனத்திடம் இருந்து விலகிய இரண்டே ஆண்டுகளில் தன் சொந்த காலணி நிறுவனத்தை சாய்ஷ் (Saysh) என்ற பெயரில் தொடங்கினார். தன் சொந்த நிறுவனத்தின் காலணி அணிந்து 2021இல் நடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஓடத்தொடங்கிய அலிசனைப் பார்த்து, தாயானப்பின் முன்புபோல் இப்போதும் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அந்தக் கேள்விக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து தன் கடைசி ஒலிம்பிக்ஸில் 400மீ ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும் வென்றார். இந்த வெற்றியின் மூலம் அதிக ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற அமெரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

அதேபோல, பராக் ஒபாமாவின் ஆட்சிக்குக் கீழ் செயல்பட்ட விளையாட்டுத் துறையின் பரிந்துரைக் குழுவிலும் அலிசன் ஃபெலிக்ஸ் இடம்பெற்றார் என்பது மற்றொரு பெருமைக்குரிய விஷயம்.

இப்போது நடந்துவரும் 2022 தடகள சாம்பியன்ஷிப்பில் தன் கடைசி போட்டியில் ஓடிய அவரின் கால்களுடன் மக்கள் கண்களை நகர்த்தியதற்குக் காரணம் 200 மீட்டர்கள் இல்லை, 19 ஆண்டுக்கால ஓட்டங்கள்! அலிசனின் குழந்தை கேம்ரின் மட்டும் தாயின் ஓட்டத்தைப் பார்க்கவில்லை, எத்தனையோ குழந்தைகள் அலிசனைப் பார்த்து ஓடத்தொடங்கியிருப்பார்கள். நிச்சயம் தொடங்குவார்கள்.

அலிசன் ஃபெலிக்ஸ்

அலிசன் ஃபெலிக்ஸ்
David J. Phillip

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com