உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஞ்சும் மவுத்கில்லுக்கு வெண்கல பதக்கம் | Shooting competition

Share

செய்திப்பிரிவு

Last Updated : 18 Jul, 2022 06:26 AM

Published : 18 Jul 2022 06:26 AM
Last Updated : 18 Jul 2022 06:26 AM

அஞ்சும் மவுத்கில்

புதுடெல்லி: உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் மவுத்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

தென் கொரியாவின் சாங்வான் நகரில்ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்சும் மவுத்கில் 402.9 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இதே பிரிவில் ஜெர்மனி வீராங்கனை அன்னா ஜான்சென் (407.7 புள்ளிகள்) தங்கப் பதக்கத்தையும், இத்தாலி வீராங்கனை பார்பரா கம்பாரோ (403.4 புள்ளிகள்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

ஏற்கெனவே நடைபெற்ற ஆடவர்3பி பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது. இந்திய அணியில் சஞ்சீவ் ராஜ்புத், செயின் சிங்,ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com