காலிறுதியில் வலுவான எதிராளியான சீன வீராங்கனை ஹான் யூ-வை எதிர்கொண்டு அவரை 3 செட்களில் வீழ்த்தியதற்காக போட்ட கடும் உழைப்புக்கான பலன் இந்த அரையிறுதிப் போட்டியில் கிடைத்தது, ஒரு கடினமான போட்டிக்குப் பிறகே சிந்துவை வீழ்த்துவது கடினமே. அதுவும் அந்தப் போட்டி சரிசமமான போட்டியாக அமைந்து நீயா நானா என்ற ரேஞ்சுக்குப் போனதால் சிந்துவின் ஆட்டம் பல பரிமாணம் கொண்டது, ஆகவே அத்தகைய போட்டிக்குப் பிறகே அரையிறுதி ஒரு சாதாரணமாக அவருக்கு இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
முதல் செட்டில் ஜப்பான் வீராங்கனை கவாகமி 12-12 என்று சமன் செய்தார், ஆனால் அதன் பிறகு சிந்துவின் ஆட்டத்திற்கு முன்னால் ஒன்றுமில்லாமல் சரணடைய நேரிட்டது. 20-15 என்று சிந்து ஸ்மாஷ், நெட் ஆட்டம், வாலி என்று அசத்தித் தன் முழு ரேஞ்சையும் காட்டியதால் ஜப்பான் வீராங்கனை செட்டை இழக்க நேர்ந்தது.
2வது செட்டில் ஜப்பான் வீராங்கனையை உண்மையில் வறுத்தெடுத்தார் சிந்து என்றே கூற வேண்டும். சீன வீராங்கனையிடம் வென்றதில் சிந்துவின் மிகப்பெரிய சாதகமான அம்சமான லாங் ரேலியை இவரிடமும் வென்றார் 12-4 என்று லீட் பறந்தது. ஆனால் அடுத்த ஒரு 5-10 நிமிடங்கள் ஜப்பான் வீராங்கனைக்கு என்ன நடந்ததென்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை சிந்து 19-5 என்று வெற்றிக்கு அருகில் வந்தார்.
ஆனால் ஜப்பான் வீராங்கனை மேலும் 2 புள்ளிகள் எடுத்து 7-ல் முடிந்தாலும் அவருக்கு சிந்து இழைத்த சேதம் அவர் இனி எழும்புவது கடினம் என்றே தெரிகிறது. 21-7 என்று சீல் வைத்தார் சிந்து, இறுதிக்கு முன்னேறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.