முழுங்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத விராட் கோலி, இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பதில் தொடர்ந்து சந்தேகமே நிலவி வருகிறது. மோசமான பார்மே அவரை அணியிலிருந்து நிறுத்தி வைத்துள்ளது என்று பலரும் பலவிதமாகப் பேசத் தொடங்கி விட்டனர்.
ஆனால் அவர் ஆடுவதைப் பார்த்தால் பார்முக்கு வர இன்னும் ஒன்றிரண்டு போட்டிகள் போதும் என்பது போன்ற ஒரு புதிய நம்பிக்கை அவரிடத்தில் தோன்றியிருப்பது போல் தெரிகிறது. மோசமான பேட்டிங் காரணமாக விராட் கோலியை இந்திய நிர்வாகம் ஆடும் லெவனில் இருந்து நீக்கியிருக்கலாம் என சிலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.
எனவே இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில் ஷார்ட் பிட்ச் பந்துகளில் ஆடத்தெரியாமல் அவுட் ஆகும் ஸ்ரேயஸ் அய்யரை உட்கார வைத்து விட்டு கோலியை அணியில் எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிராக்யன் ஓஜா கூறியது என்னவெனில், “முதல் போட்டியில் அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியிலும் அவர் விளையாடுவார் என கேள்விப்பட்டேன். விராட் கோலி அடுத்த போட்டியில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். அடுத்த போட்டியிலும் விராட் கோலி விளையாடாவிட்டால் அதன் மூலம் புதிய சர்ச்சைகளும் ஏற்படும் அல்லது அவருக்கு ஏற்பட்ட காயத்தின் வீரியம் பெரிதாக இருக்கும்.
இரண்டுமே இந்திய அணிக்கு நல்லது அல்ல. விராட் கோலி முழு உடற்தகுதியுடன் இருந்தால் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக விராட் கோலிக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும்” என்று ஓஜா தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.