சூரியகுமார் யாதவ் சதத்தை பாராட்டும் லெஜண்ட்கள் – News18 Tamil

Share

கடந்த ஆண்டு போராடி தன் இடத்தை இந்திய அணியில் பெற்ற சூரியகுமார் யாதவ் நேற்று அடித்த மறக்க முடியா, நெஞ்சை வீட்டு நீங்கா அதிரடி டி20 சதத்தின் மூலம் இந்தியாவின் 5வது டி20 சதமெடுத்த வீரரானார், அவரது சதம் வெற்றிக்கு இட்டுச் செல்லவில்லை என்பதைத் தவிர வெற்றிக்கு வெகு அருகில் கொண்டு வந்து நிறுத்தியது, அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயம் ஒரு மாபெரும் இதிகாச வெற்றி டி20 விரட்டல் சதமாக இது அமைந்திருக்கும்.

இதனையடுத்து சூரியகுமார் யாதவ்வை இந்திய லெஜண்ட்கள் பாராட்டி பதிவிட்டுள்ளனர்:

19வது ஓவரை மொயீன் அலி வீச அவரை 2 பவுண்டரிக்ள் 1 சிக்சர் என்று விளாசி ரசிகர்களுக்கு மகா வெற்றி குறித்த நம்பிக்கையை அளித்தார். ஆனால் இன்னொரு பெரிய ஷாட்டைத்தான் ஆட வேண்டும் வேறு வழியில்லை. அடித்தார் பில் சால்ட்டிடம் கேட்ச் ஆனார், சூரியகுமார் நேற்று ஒரே ஒரு தவறு செய்தார், அந்தத் தவறு அவரது அவுட்டில் முடிந்தது. மறக்க முடியாத இன்னிங்ஸ். நெஞ்சில் நீங்கா இடம்பெறும் இன்னிங்ஸ்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com