மவ்லின்னாங்: இந்தியாவில் ‘ஆசியாவின் தூய்மையான கிராமம்’ எங்குள்ளது? ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகளுக்கு ஏன் தடை?

Share

மவ்லின்னாங்

பட மூலாதாரம், Jamie Fullerton

    • எழுதியவர், ஜேமி ஃபுல்லர்டன்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சுற்றுலா மவ்லின்னாங் கிராமத்தின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. ஆனால், பல தசாப்தங்களாக சுற்றுலாப் பயணிகளை வரவேற்ற பிறகு, வாரத்தில் ஒரு நாள் தங்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மவ்லின்னாங் கிராமத்தில் வெறும் 600 பேர் வசிக்கின்றனர். ஆனால், ஒவ்வொரு சனிக்கிழமையும் 1,000 பேர் வரை சுற்றுலாப் பயணிகள் அந்தக் கிராமத்துக்கு வருகின்றனர்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெருக்களில் உலா வரவும், சுத்தமாக இருக்கும் வீதிகளில் செல்ஃபி எடுக்கவும், மேலும் இந்தியா முழுவதும் இந்த கிராமத்தைப் புகழ்பெறச் செய்த “ஆசியாவின் தூய்மையான கிராமம்” என்ற பட்டத்திற்கு இது உண்மையிலேயே தகுதியானதா என்பதைப் பார்க்கவும் அவர்கள் வருகின்றனர்.

ஆனால், 2026 ஜனவரி முதல், கிராமத்துக்குச் செல்லும் ஒரே சாலையில் அமைக்கப்பட்டுள்ள கருப்பு நிற இரும்புக் கதவுகள் வாரத்தில் ஒரு நாள் மூடப்பட்டு, காவலுடன் பாதுகாக்கப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு நாள் சுற்றுலா வரும் பயணிகளை கிராமத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று மக்கள் எதிர்பாராத முடிவை எடுத்துள்ளனர். இதன் மூலம், சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கிடைக்கும் வருமானத்தையும் அந்த ஒரு நாளில் அவர்கள் இழக்கின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com