24 மணிநேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைந்தது எப்படி? நிலவரம் என்ன?

Share

ஸ்பெயின் அதிகாரிகளின் இந்த மதிப்பீட்டின்படி, கடந்த ஒரு நாளில் செயுட்டாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, சுமார் 83,600 மக்கள் வசிக்கும் அந்த நகரத்தின் மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமாக இருக்கலாம்.

பட மூலாதாரம், Reuters

கடந்த 24 மணிநேரத்தில் மொராக்கோவில் இருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செயுட்டாவுக்குள் சுமார் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

வியாழக்கிழமையன்று ஆயிரக்கணக்கானோர் நீந்தி நகருக்குள் நுழைவதைக் காட்டும் காணொளிகளும் படங்களும் வெளியாகின. இரவிலும் இவ்வாறு மக்கள் ஊடுருவியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்திய நாட்களில் இந்தப் பகுதிக்கு வர முயன்றபோது குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

செயுட்டா அல்லது ஸ்பெயினின் மற்றொரு வட ஆப்பிரிக்க பகுதியான மெலிலாவை அடைய முயன்றபோது கடலில் தடுத்து நிறுத்தப்படும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் இந்த மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ஸ்பெயின் அதிகாரிகளின் இந்த மதிப்பீட்டின்படி, கடந்த ஒரு நாளில் செயுட்டாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, சுமார் 83,600 மக்கள் வசிக்கும் அந்த நகரத்தின் மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமாக இருக்கலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com