பிரதமர் மோதி ‘தேர்வு சீர்திருத்தம்’ குறித்து முக்கிய அறிவிப்பு – நந்தன் நிலேக்கனிக்கு புதிய பொறுப்பு

Share

மோதி என்ன கூறினார்?

பட மூலாதாரம், narendramodi/instagram

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பிரதமர் நரேந்திர மோதி, பிரபல தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேக்கனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு ஒன்றை அமைப்பதாக அறிவித்துள்ளார்.

அந்தக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தேர்வு முறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றை பதிவிட்ட பிரதமர் மோதி, “மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கடுமையான சட்டப் பிரிவுகளைக் கொண்ட புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம்,” என்று கூறினார்.

அவர் மேலும், “ஆனால் நாம் எதிர்காலத்தையும் பற்றி சிந்திக்க வேண்டும். நமது தேர்வு முறை நம்பகமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். தேர்வு முறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகபட்சமாக உறுதிப்படுத்த வேண்டும். இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு, உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேக்கனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழுவை அமைக்க முடிவு செய்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், “இந்தப் பணிக்குழு தேர்வு முறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து கவனம் செலுத்தும். அதன் அறிக்கையின் அடிப்படையில், வரவிருக்கும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்,” என்று தெரிவித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com