தி டெலிகிராப்பில் அவர் எழுதிய பத்தில் கூறியிருப்பதாவது:
2004இல் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் ஆடிய போது பந்துகள் தையலில் பட்டு தெறித்தது, அவர் ட்ரைவ் ஆடப்போய் எட்ஜ் ஆகி அவுட் ஆகிக்கொண்டிருந்தார். அவர் இதற்கு என்ன செய்தார்? சிட்னியில் ட்ரைவ் ஆடப்போவதில்லை, அதுவும் ஆஃப் சைடில் ஆடப்போவதில்லை என்று முடிவெடுத்தார். 241 ரன்கள் எடுத்தார். கிராலி இதை முயற்சி செய்ய வேண்டும்.
பந்து புதிதாக இருக்கும் போது 2 மணி நேரத்துக்கு ட்ரைவே ஆடவில்லை. செய்ததையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்தால் அவுட் ஆக வேண்டியதுதான் ஏன் தெரியுமா? பவுலர்கள் முட்டாள்கள் அல்லவே.
கிராலி தனது மோசமான சராசரியில் சர்வதேச கிரிக்கெட் ஆட தகுதியற்றவராக இருக்கிறார். கிராலியை ஒருவர் அதிகமாக ஆதரிக்கும் போது பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.
இவ்வாறு கூறுகிறார் மைக்கேல் வான். ஆனால் மைக்கேல் வானுக்கு ஒன்று புரியவில்லை, சச்சின் டெண்டுல்கர் வேறு, ஜாக் கிராலி வேறு என்பதுதான் அது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.