அயர்லாந்து அணி வரலாற்று வெற்றி – இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெறாதது ஏன்?

Share

டி20 சர்வதேச கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகத்திற்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Ashley Allen-ICC/ICC via Getty Images

படக்குறிப்பு, டி20 சர்வதேச கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகத்துக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், இன்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வீழ்த்தியது. 183 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 50 ரன்கள் எடுத்தார். இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், எந்தவொரு வடிவத்திலும் இந்தியாவுக்கு எதிராக அயர்லாந்து அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீசத் தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களைக் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

வெள்ளிக்கிழமை பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் இளம் அதிரடி பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி மீது கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர்; இருப்பினும், அவர் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை.

டாஸுக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், துரதிருஷ்டவசமாக வைபவ் இந்தப் போட்டியில் விளையாடவில்லை என்று கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com