FIFA 2026: பாஸ்டனை மாற்றிய ஸ்காட்லாந்து ரசிகர்களின் நெகிழ்ச்சியான கதை! FIFA 2026: The heartwarming story of how Scottish fans transformed Boston!

Share

பாஸ்டனின் ஒரு அமைதியான பகுதியில் உள்ள Airbnb விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஸ்காட்லாந்து ரசிகர்கள், அதிகாலை 6.30 மணிக்குத் தங்களது பாரம்பர்ய இசைக்கருவியான பேக்பைப்பை வாசிக்கத் தொடங்கினர்.

சாதாரணமாக இதை ஒரு தொந்தரவாக நினைத்து அக்கம் பக்கத்தினர் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மைக் மோரிசன் என்ற உள்ளூர்வாசி, அந்த இசையையும் அவர்களின் உற்சாகத்தையும் ரசித்து, அவர்களுக்கு காலை உணவாக சாசேஜ் சமைத்துக் கொடுத்து அவர்களுடன் இணைந்து கொண்டார்.

ஸ்காட்லாந்து ரசிகர்கள் மைக்கை தங்கள் குழுவில் ஒருவராக ஏற்றுக்கொண்டு அவருக்கு சான்றிதழ் வழங்கினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்து அணியின் அடுத்த போட்டியை நேரில் காண, மைக் மோரிசனை மியாமி நகருக்கு Airbnb நிறுவனம் தனது சொந்தச் செலவில் அனுப்பி வைத்தது!

FIFA 2026 ஸ்காட்லாந்து

FIFA 2026 ஸ்காட்லாந்து

`ஸ்காட்லாந்து இல்லை என்றால் பார்ட்டி இல்லை’ (No Scotland – No party) என்பது அவர்களின் முழக்கமாக இருந்தது. பாஸ்டன் நகரமே இவர்களின் மது அருந்தும் வேகத்தைப் பார்த்து மிரண்டு போனது. டவுன்டவுனில் உள்ள ‘சாமுவேல் ஆடம்ஸ்’ என்ற பிரபலமான மதுபான விடுதியில், வெறும் 4 நாள்களில் சுமார் 4,000 பைண்ட் (Pints) பீர் குடித்துத் தீர்த்தனர்.

இது அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4 கொண்டாட்டத்தில் விற்பனையாவதை விட 4 மடங்கு அதிகம்! பீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அந்த விடுதிக்கு 4 முறை ‘அவசரகால சப்ளை’ செய்யப்பட்டது. “பாஸ்டனில் பீர் தீர்ந்துவிட்டது” என்பது சமூக வலைத்தளங்களில் வைரல் மீம் ஆக மாறியது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com