திருச்செந்தூர்: சேவைக் கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு; பக்தர்கள் அதிர்ச்சி! | The temple administration has decided to increase service fees at Tiruchendur Subramania Swamy Temple

Share

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா போன்ற கட்டண சேவைகளின் தொகையை அதிகரிக்க திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக  பக்தர்களிடமிருந்து கருத்து கேட்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “அதிகளவு உயர்ந்துள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டும், திருக்கோயிலுக்கான வருவாய் குறைவை ஈடு செய்யும் வகையிலும், நிர்வாகத்தின் நலன் கருதியும் தக்கார் தீர்மானத்தின் அடிப்படையிலும் தற்போதுள்ள சேவைக் கட்டணங்கள் மற்றும் அபிஷேக, சிறப்புத் தரிசனக் கட்டணங்களை உயர்த்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.  

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

தங்கரத உலா திட்டத்திற்கான ஒருநாள் கட்டணம் 2,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாகவும், அதன் நிரந்தர வைப்பு நிதி 50,000 ரூபாயில் இருந்து 1 லட்ச ரூபாயாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சண்முகார்ச்சனைக்கான ஒருநாள் கட்டணம் 5,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாயாகவும், மூலவர் அபிஷேகத்திற்கான ஒருநாள் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

மேலும், ஒன்பது கால பூஜைக்கான ஒருநாள் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 6,500 ரூபாயாகவும், அதன் நிரந்தர வைப்பு நிதி 20,000 ரூபாயில் இருந்து 90,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com