திருவள்ளூர்: அமோனியா வாயு கசிவு விபத்தில் தொழிலாளர்கள் பலி; என்ன நடந்தது?

Share

அமோனியா வாயு கசிந்த உணவு ஏற்றுமதி நிறுவனம்
படக்குறிப்பு, அமோனியா வாயு கசிந்த உணவு ஏற்றுமதி நிறுவனம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

திருவள்ளூரில் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) மதியம் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது?

“வாயு கசிவு ஏற்பட்ட நேரத்தில் தொழிற்சாலைக்கு வந்து பார்த்தோம். அவர்களில் பலரும் சிறுமிகளாக இருந்தனர். அவர்கள் மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன” என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

பெண் தொழிலாளர்களின் வயது விவரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக, தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயின்ட் பீட்டர் அண்ட் பால் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அசாம், ஜார்க்கண்ட், ஒடிஷா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். பெண் தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இந்த ஆலையில், இறால் பதப்படுத்தும் தொழில் பிரதானமாக உள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com