காலமானார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா – BBC News தமிழ்

Share

பாரதிராஜா

பட மூலாதாரம், KV MANI

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ் சினிமாவின் “இயக்குநர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84.

இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், “சங்கத்தின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று அதிகாலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்” என அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் , திரைத்துரையினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு ஆளுநர்.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வெளியிட்ட பதிவில், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்கள் மறைவால் மிகுந்த துயரமடைந்ததாக கூறியுள்ளார்.

“கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்திய அவரது படைப்புகள் தமிழ் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்துள்ளன. அவரின் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.” என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com