தொடர்ந்து 2வது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஆர்சிபி – குஜராத்துக்கு எதிராக இமாலய வெற்றி

Share

ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார் ரஜத் பட்டிதார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார் ரஜத் பட்டிதார்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 குவாலிஃபயர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது ஆர்சிபி.

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய இரு போட்டிகளில் தலா 1 வெற்றி பெற்றன. பெங்களூருவில் நடந்த போட்டியில் ஆர்சிபி-யும், ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் டைட்டன்ஸும் வென்றன. இரண்டு போட்டிகளிலுமே சேஸ் செய்த அணியே வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்தது. ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது. அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார்.

அடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் 19.3 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ராகுல் திவாதியா 68 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com