தமிழக முதல்வர் விஜயிடம் இலங்கை தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன?

Share

இந்தியா, இலங்கை, விஜய், மீனவர் பிரச்னை, இலங்கை தமிழர்கள்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், தற்போது இந்த விடயம் இலங்கை அரசியல் களத்திலும் பேசு பொருளாகியுள்ளது.

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், தற்போது இந்த விடயம் இலங்கை அரசியல் களத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக தமிழக தேர்தல் பிரசார மேடைகளில் கச்சத்தீவை இந்தியாவிற்கு பெற்றுக்கொள்கின்றமை தொடர்பில் ஜோசப் விஜய் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

கச்சத்தீவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவிற்கு வழங்க முடியாது என இலங்கை மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உறுதியாக கூறுகின்ற அதேவேளையில், தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான உதவிகளையும் இலங்கை வாழ் தமிழர்கள் தமிழகத்திடம் கோரி நிற்கின்றனர்.

குறிப்பாக இந்தியாவின் தலையீட்டில் இலங்கை அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த தமிழக முதலமைச்சர் விஜய் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதேபோன்று, தமிழகத்திலிருந்து 200 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்து பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வரும் இந்திய வம்சாளி மலையக தமிழர்களின் எதிர்கால நலத்திட்டங்கள் தொடர்பில் தமிழக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com