CSK vs LSG: ‘This is for you Papa’ – அரைசதத்தை தந்தைக்கு சமர்பித்த உர்வில்| Urvil dedicates his half-century to his father.

Share

நேற்று (மே. 11) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன் உர்வில் படேல் வெறும் 13 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.

13 பந்துகளில் அரைசதம் அடித்தவுடன் உர்வில் தனது வெற்றியை வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.

தனது பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை வெளியே எடுத்து கேமராக்களுக்கு முன்பு காட்டினார்.

உர்வில் படேல்

உர்வில் படேல்

அந்தச் சிறிய காகிதத்தில், “This is for you Papa’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய உர்வில் படேல், “முதல் அரைசதம் உணர்ச்சிப்பூர்வமானது.

அதனை எனது தந்தைக்குச் சமர்ப்பிக்கிறேன். முந்தைய போட்டிகளில் நல்ல தொடக்கங்கள் கிடைத்தும் அவுட் ஆகிவிட்டேன். ‘நீ விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். நீ ரன் அடித்தாயா இல்லையா என்பது எனக்கு முக்கியமில்லை, இப்படியே விளையாடு’ என என் தந்தை சொன்னார். நான் எப்போதும் என் அப்பாவுக்காக இதேபோன்று விளையாடுவேன்” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com