தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார் விஜய் – என்ன நடக்கிறது?

Share

விஜய்

பட மூலாதாரம், TN DIPR

முதலமைச்சர் விஜய் தொடர்ந்து பேசிவருகிறார்.

“மக்கள் எனக்கு கொஞ்சம் அவகாசம் தந்தால் உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருப்பேன். பெண்கள் பாதுகாப்பு கடுமையாக கடைபிடிக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை இன்றிலிருந்தே எடுப்பேன். நம் பிள்ளைகளை அதிலிருந்து காக்க வேண்டியது அரசின் பொறுப்பு. எல்லோருக்கும் சட்டம்-ஒழுங்கை உறுதிசெய்வேன்.” என்றார்.

“என்னை கஷ்டப்படுத்தியவர்களாக இருந்தாலும், நண்பர்கள், எதிரிகள் யாராக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்களே.

கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முதன்மை கவனம் செலுத்தப்படும்.

மக்களின் பணம் எனக்கு தேவையில்லை. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், என் அரசில் இருப்பவர்களாக இருந்தாலும் விடமாட்டேன்.

‘நாம் ஜெயித்துவிட்டோம்’ என ஆட்டம் ஆடலாம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இப்போதே மனதிலிருந்து எடுத்துவிடுங்கள்.” என விஜய் பேசினார்.

பெண்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், மீனவர்கள் என எல்லோரும் இந்த அரசின் நன்றாக இருப்போம். சிறுபான்மை சகோதரர்களுடன் இந்த அரசு எப்போதும் உடன் இருக்கும். இந்து – கிறிஸ்தவ – இஸ்லாமிய முகம்தான் விஜய்.

எங்களுக்கு வாக்களித்த ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நன்றி

விஜய் (மாமாவின்) குட்டி நண்பர்களுக்கும் நன்றி. உங்களுக்காக எல்லா நல்ல விஷயங்களையும் நான் செய்வேன்.

தவெக தோழர்கள் இல்லாமல் எதுவுமே இல்லை. நிர்வாகிகள், தோழர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், விர்ச்சுவல் வாரியர்ஸ் அனைவருக்கும் நன்றிகள். எல்லோரும் சேர்ந்து புதிய அரசை கொடுப்போம். இதுவொரு புதிய தொடக்கம். உண்மையான சமூக நீதி, மதச்சார்பின்மையின் புதிய காலம் தற்போது தொடங்குகிறது.” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com