ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்

Share

இந்த சீசனில் தன் 4வது அரைசதத்தைப் பதிவு செய்தார் ஷுப்மன் கில்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த சீசனில் தன் 4வது அரைசதத்தைப் பதிவு செய்தார் ஷுப்மன் கில்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 52வது லீக் சுற்றுப் போட்டியில் இன்று (மே 9) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் டைட்டன்ஸ் அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் ஆடவில்லை. அதற்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அந்த அணியின் கேப்டனாக முதல் முறையாக செயல்பட்டார். ஷிம்ரன் ஹிட்மெயர் மற்றும் யஷ் ராஜ் புஞ்சா அந்த அணியின் பிளேயிங் லெவனுக்குத் திரும்பியதாக ஜெய்ஸ்வால் கூறினார். டைட்டன்ஸ் அணியில் மானவ் சூதர் நீக்கப்பட்டு சாய் கிஷோர் சேர்க்கப்பட்டார்.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்ஷன் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் அரைசதம் எடுத்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com