“நிச்சயமாக இது எங்களுக்கு ஒரு கடினமான சீசன். குறிப்பாக பேட்டிங்கில்.!”- நிக்கோலஸ் பூரன்| “Definitely, this has been a tough season for us, especially in batting!” – Nicholas Pooran

Share

ஐபிஎல் 2026 தொடரின்  நேற்றைய (ஏப்ரல் 15) ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது, பந்து கையில் பலமாகத் தாக்கியதில் காயமடைந்து, பாதியிலேயே வெளியேறினார்.

இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அவருக்குப் பதிலாக போட்டிக்குப் பின் பேசிய தற்காலிக கேப்டன் நிக்கோலஸ் பூரன், அணியின் சவால்கள் மற்றும் தனது சொந்த ஃபார்ம் குறித்துப் பேசினார்.

தோல்விக்குப் பிறகு பேசிய நிக்கோலஸ் பூரன், “நிச்சயமாக இது எங்களுக்கு ஒரு கடினமான சீசன். குறிப்பாக பேட்டிங்கில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் பின்தங்கியிருக்கிறோம்.

இந்த ஆடுகளத்தில் 175 ரன்கள் எடுத்திருந்தால் அது ஒரு சவாலான இலக்காக இருந்திருக்கும். ஆனால், இந்த சீசன் முழுவதுமே நாங்கள் பேட்டிங்கில் தடுமாறி வருகிறோம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com