அமெரிக்கா – இரான்: பாகிஸ்தானுக்கு கிடைக்கும் அங்கீகாரம் இந்தியாவுக்கு ஒரு பின்னடைவா?

Share

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா, மோதி, ஜெய்சங்கர்

பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான இரண்டு வார கால போர் நிறுத்தத்தை இந்தியா வரவேற்றுள்ளது. இருப்பினும், இந்தப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் பாகிஸ்தானுக்கு இருந்த பங்கு பற்றி இந்தியா எதுவும் குறிப்பிடவில்லை.

இந்திய வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில், “போர் நிறுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இது மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதியை நிலைநாட்ட உதவுமென்று நம்புகிறோம். நாங்கள் முன்பே கூறியது போல, தற்போதைய மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, ராஜதந்திர நடவடிக்கைகள் ஆகியவை அவசியமானவை,” என்று தெரிவித்துள்ளது.

இந்தப் போர் ஏற்கெனவே கடுமையான சேதங்களை ஏற்படுத்தி இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது. இது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ளதுடன், வர்த்தக அமைப்புகளையும் சீர்குலைத்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில், “எண்ணெய் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்ல முடியுமென நாங்கள் நம்புகிறோம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட பல உலகத் தலைவர்கள், பதற்றத்தைத் தணிக்க உதவியதற்காக பாகிஸ்தானை பாராட்டியுள்ளனர். ஆனால், இஸ்லாமாபாத்தில் இரான், அமெரிக்கா இடையிலான சாத்தியமான பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தியா மௌனம் காத்து வருகிறது.

சர்வதேச பாராட்டுகளைப் பெறும் பாகிஸ்தான்

இந்தப் போர் நிறுத்தத்தில் பாகிஸ்தானின் பங்கு சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com