ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான்- குஜராத் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ரவி பிஷ்னோய் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.
விருது வென்ற பிறகு பேசிய ரவி பிஷ்னோய், ” கடந்த சீசன் எனக்கு சவாலானதாக இருந்தது. ஆனால், என்னுடைய திறனின் மீது நம்பிக்கை வைத்தேன். சரியான லெந்தில் வீசத் தவறினால் என்னுடைய பந்தை சிக்சர் அடித்து விடுகிறார்கள்.

அதுதான் என்னுடைய பலவீனமாக இருந்தது. சரியான லெந்தை பிடிப்பதில்தான் முழுக்க முழுக்க கவனம் செலுத்தினேன். நான் ஃபுல் லெந்தில் வீசி அடிபட்டால் பிரச்னை இல்லை.
ஆனால், குட் லெந்தில் வீசும் போது பேட்டர்கள் திணற வேண்டும். அதைத்தான் இந்தப் போட்டியிலும் செய்தேன். சீராக குட் லெந்தில் வீச முயற்சித்தேன்.