'டிரெஸ்ஸிங் ரூமில் எடுத்த அந்த ஒரு முடிவு.!' – வெற்றியை விவரிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!

Share

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய  (ஏப்ரல் 3) முக்கியமான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே நிர்ணயித்த 210 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பஞ்சாப் அணி, அதிரடியாக விளையாடி 2-வது வெற்றியைப் பதிவு செய்தது. சென்னை அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது, பஞ்சாப் ரசிகர்களுக்குப் பெரிய உற்சாகத்தைத் தந்துள்ளது.

PBKS
PBKS

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “உண்மையைச் சொல்லப்போனால், 210 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கும் போது ஒருவித பதற்றம் இருக்கத்தான் செய்தது.

ஆனால் பிரியான்ஷ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் கொடுத்த அதிரடியான தொடக்கம் அந்தப் பதற்றத்தைப் போக்கி எங்களுக்கு ஒரு அபாரமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து, ஒட்டுமொத்த அணியின் பேட்டிங் வரிசையையும் நிலைப்படுத்துகிறது. முதல் இரண்டு போட்டிகளிலேயே எங்கள் அணியின் அனைத்து வீரர்களுக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது கடினமான சூழல்களை எப்படி கையாள்வது என்ற நம்பிக்கையை வீரர்களுக்கு அளிக்கும்.

Shreyas
Shreyas

எங்களுடைய டிரெஸ்ஸிங் ரூமில் நாங்கள் ஒரு விஷயத்தை முடிவு செய்துள்ளோம் – அதாவது வெளியே இருப்பவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக அல்லாமல், எங்களுக்குள் ஒருவரை ஒருவர் வியக்க வைக்கும் வகையிலான ஒரு தனித்துவமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதுதான் அது. இது எங்களுக்கு ஆட்டத்தில் ஒரு தெளிவைத் தருகிறது.

எதிரணியில் ஸ்பின் பந்துகளைச் சிறப்பாக எதிர்கொள்ளும் உள்நாட்டு வீரர்கள் இருந்ததால், சஹாலுக்கு ஒரு ஓவர் மீதமிருந்தாலும் நான் வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்த முடிவு செய்தேன்.  யுஸ்வேந்திர சஹால் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். எப்போதெல்லாம் எனக்குச் சந்தேகம் வருகிறதோ அப்போதெல்லாம் சஹால் மீது நம்பிக்கை வைப்பேன். அதே சமயம் ‘ஓவர் ரேட்’ விஷயத்தில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடைசி 2 ஓவர்களில் 5 பீல்டர்கள் உள்ளே இருக்கும்போது பந்துவீசுவது சவாலானது, அந்தத் தவற்றை அடுத்த முறை சரிசெய்து கொள்வோம்,” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com