இரான் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே முரண்பாடு உள்ளதா? – டிரம்ப் பற்றி பேசிய நெதன்யாகு

Share

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Ronen Zvulun/POOL/AFP via Getty Images

படக்குறிப்பு, வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க இரானின் எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார்.

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தற்போதைய இரான் போரில் இஸ்ரேல் அமெரிக்காவை ‘கட்டாயப்படுத்தியது’ என்ற கருத்தை பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேலிய பிரதமர், “அதிபர் டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது அவருக்குச் சொல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா?” என்றார்.

பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தின. இதில் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல உயர்மட்ட இரானிய தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

‘இஸ்ரேல் தன்னை போரில் ஈடுபட கட்டாயப்படுத்தியது’ என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com