அலி லரிஜானி: ‘இரான் ஆட்சியின் தலைவரை’ கொன்றதாக கூறும் இஸ்ரேல் – என்ன நடக்கிறது?

Share

இரான், இஸ்ரேல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அலி லரிஜானி

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லரிஜானி இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லரிஜானி கொல்லப்பட்டாரா அல்லது காயமடைந்தாரா என்பதை இரான் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இதுகுறித்த புதிய தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்திய நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரானின் துணை ராணுவப் படையான பசிஜ் பிரிவின் தளபதியை தனது விமானப்படை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

பசிஜ் பிரிவின் தளபதி

திங்கட்கிழமை அன்று டெலகிராமில் வெளியிட்ட பதிவில், பசிஜ் பிரிவின் தளபதி கொலாம்ரெசா சொலெய்மானியை இலக்கு வைத்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளாக புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஆயுதக் குழுவை இவர் தலைமை தாங்கியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com