நெதன்யாகு மரணமா? இஸ்ரேல் விளக்கமும் ஐஆர்ஜிசி மிரட்டலும் – என்ன நடக்கிறது?

Share

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், நெதன்யாகு மரணமா? ஐஆர்ஜிசி மிரட்டல்

பட மூலாதாரம், @netanyahu

படக்குறிப்பு, மார்ச் 13 அன்று எக்ஸ் தளத்தில் வெளியான பெஞ்சமின் நெதன்யாகுவின் வீடியோ செய்திக்கு பிறகு, அவர் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவத் தொடங்கின. அந்த வீடியோவில் நெதன்யாகுவிற்கு ஆறு விரல்கள் இருந்ததாகக் கூறப்பட்டது.

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் இருந்தால், அவரைப் பின்தொடர்ந்து கொல்வோம்” என்று இரான் புரட்சிகர காவல் படை(ஐஆர்ஜிசி) கூறியுள்ளது. நெதன்யாகுவை ‘குழந்தைகளைக் கொல்பவர்’ என்று இரான் புரட்சிகர காவல் படை வர்ணித்துள்ளது.

இரான் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ, ஒரு சமூக ஊடகப் பதிவில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், தென்னாப்பிரிக்காவில் உள்ள இரான் தூதரகம் ஒரு சமூக ஊடகப் பதிவில், “நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது முக்கியமல்ல. மினாபை சேர்ந்த ஒரு சிறுமியின் ஒரு முடி நெதன்யாகுவின் முழு இருப்பை விட அதிக மதிப்புடையது,” என்று எழுதியுள்ளது.

இந்த விவகாரத்தில், ‘பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் இருந்தால்’ என்று ஐஆர்ஜிசி கூறியுள்ளது ஏன்? பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கூற்று அல்லது வதந்தி எங்கிருந்து தொடங்கியது என்ற கேள்வியும் எழுகிறது.

எவ்வாறாயினும், பல செய்திகளின்படி, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் ‘நெதன்யாகுவின் மரணம்’ குறித்த செய்தியைப் போலிச் செய்தி என்று மறுத்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com