SL vs NZ: “ஏன் இவ்வளவு எதிர்மறையான கருத்துக்களைப் பரப்ப வேண்டும்?”- கேப்டன் தசுன் ஷனகா| SL vs NZ: “Why spread so many negative opinions?” – Captain Dasun Shanaka

Share

அரசாங்கத்திடம் அவர் விடுத்த வேண்டுகோள்

“ஏன் இவ்வளவு எதிர்மறையான கருத்துக்களைப் பரப்ப வேண்டும்? ஆம், நாங்கள் உலகக்கோப்பையில் தோற்றுவிட்டோம், அதற்கான காரணங்களும் எங்களுக்குத் தெரியும்.

எல்லோருக்கும் கவலைகள் உண்டு. அதைப்பற்றி பேசி சரி செய்வதை விட, எதிர்மறை எண்ணங்கள்தான் முன்னுக்கு வருகின்றன.

நாங்கள் விளையாடிவிட்டுச் சென்றுவிடுவோம், ஆனால் வருங்காலத்தில் வரப்போகும் வீரர்களுக்காக, அவர்களின் மனநலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த (எதிர்மறை விமர்சனங்களை) நிறுத்த முடிந்தால் அது அவர்களுக்கு நல்லது.

தசுன் ஷனகா

தசுன் ஷனகா

ரசிகர்களிடம் மன்னிப்பு

“அணி எப்போதும் சிறப்பாக செயல்படவே முயற்சி செய்கிறது. அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருந்தது.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எங்களால் நியாயம் செய்ய முடியவில்லை. ரசிகர்களுக்கு நாங்கள் கொடுக்க நினைத்ததைக் கொடுக்க முடியாமல் போனதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com