CBSE: பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அமல்படுத்தும் புதிய மாற்றங்கள் என்ன?

Share

சிபிஎஸ்இ, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், மாணவர்கள், மாணவிகள், மாணாக்கர்கள், பொதுத் தேர்வுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கியுள்ளன

உலகின் மிகப்பெரிய கல்வி வாரியங்களில் ஒன்றான மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), நடப்பு கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை பிப்ரவரி 17 முதல் தொடங்கியுள்ளது.

இந்த முறை 46 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தப் பொதுத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கணிதப் பாடத்துடன் தொடங்கியது.

இருப்பினும், இந்த முறை பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் ஒருவருக்கு தனது தேர்வு முடிவில் திருப்தி ஏற்படவில்லை எனில், தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும், இருப்பினும் அதற்கு ஒரு சில நிபந்தனைகளும் உண்டு.

அதேபோல் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தத்திலும் இந்த முறை மாற்றம் செய்யப்படுகிறது. டிஜிட்டல் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் சிஸ்டம் மூலம் 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்படும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com