இந்தியில் பேச சொன்ன சூர்யா; 'எனக்கு இந்தி தெரியாது மச்சி!' என பதில் அளித்த வருண்! – வைரலாகும் வீடியோ

Share

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.

இந்நிலையில், அந்த பாகிஸ்தான் போட்டிக்கு முன்பான இந்திய அணியினரின் உரையாடலின் போது தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ‘எனக்கு இந்தி தெரியாது’ எனக் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் ஜாலியாக கலந்தாலோசித்த வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது.

அந்த வீடியோவில் போட்டிக்கு முன்பான கலந்துரையாடலின் போது வருண் சக்ரவர்த்தியிடம் ‘இந்தியில் பேசு மச்சான் ப்ளீஸ்!’ என்று சூர்யகுமார் யாதவ் சொல்கிறார். அதற்கு ‘எனக்கு இந்தி தெரியாது மச்சி’ என்று வருண் சக்ரவர்த்தி பதிலை அளிக்கிறார்.

தொடர்ந்து அந்த வீடியோவில் பேசியிருக்கும் வருண் சக்ரவர்த்தி, ” ‘ஹர்திக் பாண்ட்யாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

இதே மாதிரியான பெரிய போட்டிகளில் நாம் இழக்க நேரிடும் விஷயங்களைப் பற்றி யோசிக்காதீர்கள்.

வருண் சக்கரவர்த்தி
வருண் சக்கரவர்த்தி

நாம் அடையப்போகும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள் எனக்கூறினார். அந்த அறிவுரை மிக முக்கியமானது’ என வருண் பேசியிருந்தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com