அந்தோணி விஷ டார்ட் தவளை: ரஷ்ய எதிர்கட்சி தலைவரை கொல்ல பயன்பட்டதாகக் கூறப்படும் ‘விஷ தவளை’ இதுவா?

Share

விஷத்தன்மையுள்ள தவளை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அந்தோணியின் விஷ டார்ட் தவளை தோலின் மீது சுரக்கக்கூடிய எபிபடிடின் விஷம்தான் அலெக்ஸி நவால்னியின் மரணத்திற்கு காரணம் என ஐந்து ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன.

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தென் அமெரிக்காவில் உள்ள ‘விஷ டார்ட் தவளைகளில்’ காணப்படும் ஒரு கொடிய நச்சைப் பயன்படுத்தி ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கொல்லப்பட்டார் என்று பிரிட்டனும் அதன் சில ஐரோப்பிய நட்பு நாடுகளும் தெரிவித்துள்ளன.

“நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் எபிபடிடின் (epibatidine) தடயங்கள் கண்டறியப்பட்டன. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சைபீரிய சிறைச்சாலையில் அவரது மரணத்திற்கு காரணமாக அமைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது” என்று பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த உயிரிழப்பை ஏற்படுத்தும் நச்சை பிரயோகிப்பதற்கான “வழிமுறைகள், நோக்கம் மற்றும் வாய்ப்பு” ஆகியவை ரஷ்ய அரசிடம் மட்டுமே இருந்ததாக பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் தெரிவித்துள்ளன.

ரஷ்யா இந்த ஆய்வு முடிவை “ஒரு தகவல் பிரசாரம்” என்று நிராகரித்ததாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அந்த நச்சு எது?

எபிபடிடின் என்பது விஷ டார்ட் தவளையின் தோலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு இயற்கை நியூரோடாக்ஸின் (neurotoxin) நச்சு என்று நச்சுயியல் நிபுணர் ஜில் ஜான்சன் கூறுகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com